‘ஹலோ காதல்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘நிறைவே’ வெளியாகியுள்ளது.
நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ‘மிஸ்டர் எக்ஸ்’ என்பதுடன், தற்போது பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.
அந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


