உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
13 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் விரைவில் வழமைக்குத் திரும்பும்!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
75 பார்வைகள்

சமீபத்திய விநியோகத் தடையைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக, 3,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் இன்று (12) அறிவித்துள்ளது.

குறித்த எரிவாயு இறக்கப்பட்டதும், எரிவாயு சிலிண்டர்களை நிரப்பி, அவற்றை தங்களது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் மூலமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, விநியோகங்கள் உள்ளூர் விற்பனை நிலையங்களைச் சென்றடைவதால், சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடு படிப்படியாகக் குறைந்து கிடைக்கும் தன்மை மேம்படும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிரமங்களால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு லாஃப்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்ததுடன், அவர்களின் பொறுமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டது.

விற்பனை நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்பு, தங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயு முகவரிடம் இருப்பு உள்ளதா என்பதைச் சரிபார்க்குமாறு அல்லது நிறுவனத்தின் 1345 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எச்சரிக்கை! : சுற்றுலா விசாவில் வேலை தேடி வெளிநாடு செல்ல வேண்டாம்!!

தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. மலேசியா, டுபாய்,…

91 0 0
இலங்கை செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கான வரி குறைப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகரிக்கின்ற விலைகளினால் ஏற்படும் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைத் தணிக்கும் நோக்குடன் இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மீதான விசேட வியாபாரப் பண்ட அறவீட்டினை கிலோ…

89 0 0
இலங்கை செய்திகள்

உடுவில் பகுதியில் வன்முறை குழு அட்டகாசம் – பிரதேச சபை உறுப்பினர் மீதும் தாக்குதல்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடுவில் பகுதியில் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது. இது குறித்து…

87 0 0
இலங்கை செய்திகள்

நில்வலா கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்!

நில்வலா கங்கையின் ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளமையால், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஒன்று ஏற்படக்கூடும்…

74 0 0