உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
13 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

PAYE வரி விலக்கு வரம்பை ரூ. 162,500 ஆக உயர்த்தத் திட்டம்

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
86 பார்வைகள்

உழைக்கும்  போது செலுத்தும் வரி வரம்பை 162,500 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துநர்களுக்கு மேலும் நிவாரணத்தை வழங்குவதற்கான தனிப்பட்ட வருமான வரி நிவாரணத்தை மேலும் அதிகரிப்பதற்கும் வரிவிதிக்கத்தக்க வருமான வரம்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் தனிப்பட்ட வருமான வரிக் கட்டமைப்பை திருத்துவதற்கும் நாம் முன்மொழிகின்றோம்.  

மாதத்திற்கு ரூ. 100,000 ஆக இருந்த வரி விலக்கு வரம்பை, ரூ. 150,000 ஆக எங்களால் உயர்த்த முடிந்தது.

இங்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இதனை மேலும் ரூ. 162,500 ஆக உயர்த்தும். அதன்படி, மாதச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ரூ. 162,500 வரை பெறும் ஒருவர் தனது சம்பளத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை.

6% வரி விகிதங்கள் ஏற்புடையதாகின்ற வரி வரம்புகள் மாதத்திற்கு 70,833 ஆகக் காணப்பட்ட அதேவேளையில், அதன் பின்னர் வரி மட்டம் ரூ. 41,667 ரூபாவிலிருந்து மாதத்திற்கு 50,000 ரூபாவாக விரிவுபடுத்தப்படும்.

6% விகிதத்திற்குப் பிறகு, 18% என்பதற்கு பதிலாக 12% விகிதத்தைப் பயன்படுத்தி, வரி விகிதங்கள் 6%, 12%, 18%, 24%, 30% மற்றும் 36% என சரிசெய்யப்படும்.   இத் திருத்தங்கள் ரூ. 358,000 இலிருந்து ரூ. 433,000 வரை அதிகூடிய ஏற்புடையதாகின்ற மாதாந்த வருமான அடிப்படை அளவை அதிகரிக்கின்ற அதேவேளை தனிப்பட்ட வரிசெலுத்துநர் ஒருவருக்கு ரூ. 750 தொடக்கம் ரூ. 15,750 வரையிலான மேலதிக மாதாந்த வரி நிவாரணத்தை வழங்கும்.  

அதற்கமைய, 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வரி மறுசீரமைப்புக்களினதும் 2027 இற்காக முன்மொழியப்பட்ட திருத்தங்களினதும் ஒன்றிணைந்த தாக்கத்தின் மூலம் எமது அரசாங்கத்தினால் வழங்கப்படும் மொத்த மாதாந்த வரி நிவாரணம் தனிப்பட்ட வரிசெலுத்துநர் ஒருவருக்கு ரூ. 4,250 இலிருந்து ரூ. 36,250 வரையாக உயர்வடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எச்சரிக்கை! : சுற்றுலா விசாவில் வேலை தேடி வெளிநாடு செல்ல வேண்டாம்!!

தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. மலேசியா, டுபாய்,…

91 0 0
இலங்கை செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கான வரி குறைப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகரிக்கின்ற விலைகளினால் ஏற்படும் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைத் தணிக்கும் நோக்குடன் இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மீதான விசேட வியாபாரப் பண்ட அறவீட்டினை கிலோ…

89 0 0
இலங்கை செய்திகள்

உடுவில் பகுதியில் வன்முறை குழு அட்டகாசம் – பிரதேச சபை உறுப்பினர் மீதும் தாக்குதல்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடுவில் பகுதியில் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது. இது குறித்து…

87 0 0
இலங்கை செய்திகள்

நில்வலா கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்!

நில்வலா கங்கையின் ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளமையால், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஒன்று ஏற்படக்கூடும்…

74 0 0