உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பேராசிரியர் மாமனிதர் துரைராஜா நினைவு தலைமைத்துவச் சவாலில் ஓமந்தை மத்திய கல்லூரி மாணவி சாதனை.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
87 பார்வைகள்

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா நினைவு தலைமைத்துவச் சவால் 2025/26” போட்டியில் வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரியைச் சேர்ந்த தரம் 10 மாணவி மகேந்திரராசா கம்சிகா தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற மாணவிக்கான வெற்றிப் பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் சான்றிதழ் என்பன நேற்று (11.11.2026) பாடசாலையின் காலை ஒன்றுகூடலின்போது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் சுமார் 300 மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியின் முதற்சுற்றிலிருந்து 80 மாணவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன், அவர்களில் எட்டு மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகினர்.

சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட விடய ஆய்வு (Case Study) முறையில் இப்போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சமூகப் பிரச்சினைகள் தொடர்பான விடய ஆய்வுகளை ஆராய்ந்து, அவற்றுக்கான அடிப்படைக் காரணங்களை அடையாளம் கண்டு, நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன்வைக்கும் வகையில் போட்டிச் சுற்றுகள் அமைந்திருந்தன.

குறிப்பாக, இறுதிச் சுற்றில் பங்குபற்றிய மாணவர்கள் தமது பாடசாலை அல்லது சமூகத்தில் காணப்படும் ஒரு பிரச்சினையைத் தெரிவு செய்து, அதனைப் பகுப்பாய்வு செய்து, அப்பிரச்சினைக்கான ஆக்கபூர்வமானதும் நடைமுறைப்படுத்தக்கூடியதுமான தீர்வுகளை முன்வைத்தனர்.

மாணவர்களிடையே விமர்சனச் சிந்தனை, பிரச்சினைகளை அடையாளம் காணும் திறன், தீர்வுகளை உருவாக்கும் ஆற்றல், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதை இப்போட்டி பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது.

கல்வித்துறைக்கும் சமூகத்திற்கும் அளப்பரிய பங்களிப்புகளை வழங்கிய பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா அவர்களின் நினைவாகவும், அவரது சிந்தனைகளையும் ஆளுமையையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கிலும் இப்போட்டி முன்னெடுக்கப்பட்டது.

பாடநூல் அறிவுடன் மாத்திரம் நின்றுவிடாமல், தம்மைச் சூழவுள்ள சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்குத் தீர்வுகாண முன்வரும் ஆற்றல்மிக்க இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை இம்முயற்சி வலியுறுத்துகின்றது.

கல்விக்கான இலட்சியப் பயணம் என்ற சிந்தனையுடன் கடந்த பத்து ஆண்டுகளாகக் கல்வி, வாசிப்பு, தலைமைத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் சிறகுகள் அமையம், மாணவர்களைச் சமூக மாற்றத்திற்குப் பங்களிக்கும் ஆளுமைகளாக உருவாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இப்போட்டியை முன்னெடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட சமூகத்தின் நலன், விவசாய அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீடு.!

சுதந்திர இலங்கையின் 81ஆவது வரவு – செலவுத் திட்டமாக 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான கௌரவ அநுரகுமார திசாநாயக்க அவர்களினால்…

69 0 0
இலங்கை செய்திகள்

தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற பெண் கைது.!

சட்டவிரோதமாக இரண்டு கோடியே நாற்பத்தைந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட…

77 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் இயந்திர “பரசூட்” முறையிலான நாற்று நடுகை ஆரம்பம்.!

வடமாகாணத்தில் விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய நடவடிக்கைகளை உட்புகுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை வடமாகாண விவசாய அமைச்சு மேற்கொண்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இயந்திர…

73 0 0
இலங்கை செய்திகள்

திசைகாட்டி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்திலாவது மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

இளைஞர், யுவதிகள் பல அப்பாவித்தனமான எதிர்பார்ப்புகளுடன் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த போதிலும், கடந்த இரண்டு வருடங்களில் அவை நிறைவேற்றப்படவில்லை எனவும், இம்முறை வரவு செலவுத்…

80 0 0