உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திறைசேரியில் பணம் இருந்தால் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏன் காத்திருப்பு?

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
102 பார்வைகள்

“திறைசேரியில் பணம் நிரம்பி வழிகின்றது என்று பெருமையடித்துக்கொள்ளும் அரசு, நாட்டு மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக வரவு – செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தற்போதைய அரசின் மக்கள் விரோதச் செயற்பாடுகள் மற்றும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் 220 இலட்சம் மக்களும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஸ்தம்பித்துப்போன அபிவிருத்திப் பணிகள் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் திட்டமிட்டு மீறப்படுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து வீதியில் இறங்கிக் குரல் கொடுக்கும்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தைத் தடுத்தல் என்ற போர்வையில் அரசு புதிய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றது. அதேபோன்று, நாட்டின் மகா சங்கத்தினரையும் பௌத்த துறவிகளின் காவி உடையையும் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் இழிவுபடுத்தும் அவல நிலையை இந்த அரசு தாராளமாக அனுமதித்துள்ளது.

இன்று நாட்டில் வறுமைக்கோடு அதிகரித்துள்ளதோடு, மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற பெறுமதிமிக்க தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் அவல நிலை தொடர்கின்றது. இலவச சுகாதாரச் சேவையைப் பெற வேண்டிய 220 இலட்சம் பொதுமக்களும் கடும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு நபர் மாதத்துக்கு வாழ்வதற்கு 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் போதுமானது என அரசு கூறுவது எந்தவித அறிவியல் பூர்வமான தரவுகளும் அற்ற முட்டாள்தனமான கூற்றாகும். அரசுக்கு எளிய மக்கள் மீது எந்தவித அக்கறையும் கிடையாது.

அன்று தொழிலாளர்களுக்காக முழங்கிய ஜே.வி.பியினர், இன்று மக்களிடம் இலஞ்சம் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், பயங்கரவாதி யார் என்பதைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் நிறைவேற்று அதிகாரத்திடம் ஒப்படைப்பது சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சிக்கே வழிவகுக்கும் என சர்வதேச அமைப்புகளும் கடுமையாக எச்சரித்துள்ளன. எனவே, மக்களை இந்த விவரிக்க முடியாத துன்புறுத்தல்களில் இருந்து மீட்டெடுக்கப் பலமான மாற்று அரசு என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரச நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவை அதிகரிக்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவு

அரச சேவை நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு 2027 வரவு செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

65 0 0
இலங்கை செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் சீனி மீதான வரி உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை கிலோகிராம் ஒன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில்…

73 0 0
இலங்கை செய்திகள்

7 வீத பொருளாதார வளர்ச்சி இலக்குடன் நாடாளுமன்றில் பாதீடு சமர்ப்பிப்பு

2027ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து…

56 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட சமூகத்தின் நலன், விவசாய அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீடு.!

சுதந்திர இலங்கையின் 81ஆவது வரவு – செலவுத் திட்டமாக 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான கௌரவ அநுரகுமார திசாநாயக்க அவர்களினால்…

74 0 0