அதிசொகுசு பேருந்து கோர விபத்து.!
கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று நேற்று இரவு மருதமுனை – நீலாவணை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.







