உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பயங்கரவாத தடுப்புச் சட்டம் இந்த வருடத்துக்குள் இரத்து.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
91 பார்வைகள்

“பயங்கரவாத தடுப்புச் சட்டத்தால் நாங்கள் கடந்த காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். அந்தச் சட்டத்தின் பாரதூரத்தன்மையை நாங்கள் நன்கு அறிவோம். எனவே, கொடுத்த வாக்குறுதியின்படி இந்தச் சட்டம் இந்த ஆண்டுக்குள் நிச்சயம் இரத்துச் செய்யப்படும்” என்று அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் தற்போது சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது. நீதிமன்றத்தின் அறிவிப்பை நாம் முழுமையாகச் செயற்படுத்துவோம்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் இந்தச் சட்டமூலமானது ஒருபோதும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படமாட்டாது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானதல்ல.

அனுராதபுரம் புனித நகரில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கஸ்ஸப்ப தேரர் விவகாரம் குறித்து நீதிமன்றம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும். அதேபோல், மகாநாயக்க தேரர்களும் இது குறித்துக் கவனம் செலுத்தி ஆராய வேண்டும்.

பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஒருசிலர் செயற்படும் விதம் முற்றிலும் வெறுக்கத்தக்கது. இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளினால்தான் பௌத்த மதம் ஒருசிலரால் விமர்சிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அப்பியாசக் கொப்பிகளுக்கும் அச்சிடப்பட்ட நூல்களுக்கும் Vat வரி நீக்கம்!

அப்பியாசக் கொப்பிகள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்கள் பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. 2024 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிடப்பட்ட நூல்களும் ஏனைய அச்சிடப்பட்ட…

77 0 0
இலங்கை செய்திகள்

அரச நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவை அதிகரிக்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவு

அரச சேவை நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு 2027 வரவு செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

68 0 0
இலங்கை செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் சீனி மீதான வரி உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை கிலோகிராம் ஒன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில்…

74 0 0
இலங்கை செய்திகள்

7 வீத பொருளாதார வளர்ச்சி இலக்குடன் நாடாளுமன்றில் பாதீடு சமர்ப்பிப்பு

2027ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து…

58 0 0