இன்றைய ராசி பலன்கள் – 12.11.2026
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ப்ரோமோஷனுகாக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். இலாபம் நிறைந்த நாளாக இந்த நாள் அமையப்போகிறது. எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யுங்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. அடமானத்தில் வைத்த நகைகளை மீட்க வழி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவுகளை புரிந்து கொள்வீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்து தடை விலகும். பயணங்கள் நல்லபடியாக நிறைவடையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனதில் தேக்கி வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்துவீர்கள். எதிரி தொல்லை விலகும். குடும்ப ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்குள் சுமூகமான உறவு புதுசாக தொடங்க வாய்ப்புகள் உள்ளது. பிரிந்த உறவுகள் ஒன்று சேர முயற்சிக்கலாம். மற்றபடி வேலை வியாபாரம் இன்று நல்லபடியாகவே நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன தைரியத்தோடு செயல்படுவீர்கள். உறுதியுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். பல நாள் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். பஞ்சாயத்துகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நிறைவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் போராட்டங்கள் கொஞ்சம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். முயற்சிகள் உடனடியாக வெற்றி தராது. விநாயகர் வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூலாகும். தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. சகோதர சகோதரி உறவு பலப்படும். நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனநிம்மதி இருக்கும். உங்களுடைய வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். சின்னச் சின்ன பெட்டிக்கடை வைத்திருப்பவர்களுக்கு கூட இன்று நல்ல இலாபம் வரும். மன நிறைவு ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். இரவு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி தரும். புரமோஷனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. சுப செலவுகள் கொஞ்சம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாக்கும். பயணங்களால் கொஞ்சம் உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.


