உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 11.11.2026

ராசி பலன்கள் 1 நாள் முன்
100 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியமான நாளாக இருக்கும். தீராத உடல் உபாதைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நீண்ட நாள் செய்ய முடியாமல் வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுங்கள். காரிய தடை விலகும். முருகர் வழிபாடு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். குழப்பத்தில் இருந்து மனது தெளிவு பெறும். சுப செலவுகள் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. விநாயகர் வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நிறைவடையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. எதிரி பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முதலீடுகள் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலையில் நிதானம் தேவை. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். மனதில் இருந்த பாரம் குறையும். மனது லேசாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சந்தோஷத்திற்கு குறை இருக்காது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். பிரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. புதிய முயற்சிகள் வெற்றி தரும். காரிய தடை விலகும். சிவன் வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பரிசு உங்கள் கையை வந்து சேரும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் வரும். புதிய அனுபவங்கள் கிடைக்கும். வீன் விரைய செலவுகள் குறையும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று அடக்கத்தோடு நடந்து கொள்வீர்கள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த நாள் செல்லும். உங்களுக்கான நல்லது உங்களைத் தேடி வரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நபரை முழுசாக நம்ப வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளிநபருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த நாள் முழுவதும் உழைப்பு மட்டும்தான் உங்களுடைய முழு மூச்சாக இருக்கும். நல்ல பெயர் வாங்குவீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உங்கள் கையை வந்து சேரும். பாராட்டு கிடைக்கும். எதிரி பிரச்சினைகள் சரியாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு இருக்க வேண்டும். அலட்சியமாக எந்த வேலையையும் கையில் எடுக்கக் கூடாது. எதிரி தொல்லைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மனம் சலனத்தோடு இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று. நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். புதிய முதலீடுகள் வேண்டாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். குழப்பங்கள் சரியாகும். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். கொஞ்சம் நிறைய செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக ரீதியான வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். மன நிம்மதி கிடைக்கும். குழப்பங்களில் தெளிவு பிறக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். இருக்கும் வேலையை தக்கவைத்துக் கொள்வது நல்லது. முன்கோபத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 12.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். காரிய தடை விலகும்.…

89 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 10.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.…

85 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 09.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் உங்கள் கையை வந்து சேரும். தேவைகள் பூர்த்தியாகும். கடன் சுமையிலிருந்து…

112 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 07.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். சொந்த ஊர் திரும்புவதற்கு தயாராகி விடுவீர்கள். பிரிந்த சொந்த பந்தங்களை சந்திப்பீர்கள். மனமகிழ்ச்சி இரட்டிப்பாகும்.…

119 0 0