ஓய்வை அறிவிப்பதற்கு முந்தைய நாள் விராட் கோலியுடன் பேசினேன் – கேன் வில்லியம்சன்
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன் மனம் திறந்து பேசியதாக தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், தனது ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முந்தைய நாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன் மனம் திறந்து பேசியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ‘Between Two Beers’ ல் பேசிய கேன் வில்லியம்சன், “
நான் ஓய்வு பெறுவதாக அறிவிப்பதற்கு முந்தைய நாள் விராட் கோலியுடன் மிகவும் அருமையான உரையாடல் ஒன்றை மேற்கொண்டேன்.
எங்களுடைய கிரிக்கெட் அனுபவங்கள், அணியை வழிநடத்திய கேப்டன்சி பொறுப்புகள், என பல விஷயங்களிலும் எங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருந்தன.
அவருடன் பேசும்போது கண்ணாடியில் நம்மையே பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த அளவுக்கு எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு மற்றும் புரிதல் இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி வரும் இருவரும், தங்களது கிரிக்கெட் பயணத்தில் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர். இருவரும் தங்களது அணிகளுக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று பல முக்கியமான வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.


