அஜித்தின் ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் ஸ்ரீலீலா?
நடிகர் அஜித் நடிக்கவுள்ள ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ரீலீலாவும் கலந்துகொண்டுள்ளார்.
நடிகை ஷாலினி அஜித் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், இப்படத்தில் ஸ்ரீலீலா அஜித்தின் மகளாக நடிக்கவில்லை என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலீலா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது குறித்து தற்போதைக்கு தெரிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காக ஸ்ரீலீலா சுமார் ஒன்றரை ஆண்டுகளாகக் காத்திருந்ததாகவும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.


