உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
15 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆவணம் இல்லை என்றால் சொந்தக் காணிகளைக் கூட துப்பரவு செய்ய இயலாத நிலை!! : ரவிகரன் எம்.பி விசனம்

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
117 பார்வைகள்

ஆவணங்கள் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக மக்களின் பூர்வீக வாழ்விடக்காணிகளையும், விவசாய நிலங்களையும் துப்புரவாக்கத் தடைபோடும் வனவளத்திணைக்களம், மறுபுறம் சட்டவிரோத காடழிப்புகளைக் கட்டுப்படுத்த தவறுவதோடு அவற்றுக்குரிய திணைக்கள ரீதியான பொறுப்புக்கூறல்களையும் வெளிப்படுத்துவதில்லை எனச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வனவளத் திணைக்களத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளும், சில உத்தியோகத்தர்களும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சுற்றாடல் அமைச்சரிடம் குற்றச்சாட்டொன்றையும் முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தம்மால் ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி பதிலளித்துள்ளார்.

பாராளுமன்றில் 03.11.2026இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு அடங்கிய வன்னி மாவட்டத்தில் ஒருபுறம் வன ஒதுக்குப்பகுதிகளில் இருந்து காடுகள் அழிக்கப்படுகின்றன.

பொதுமக்களிடம் இருந்து ஆவணங்களைக் கோரும் வனவளத் திணைக்களம், சட்டவிரோத காடழிப்புகளிலும் படையினரின் சட்டவிரோத நிருமாணங்களிலும் அமைதி காக்கிறது.

ஆவணம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக மாமரமும் வேம்பும் வீட்டு அத்திவாரமும் தெரியும் படியாக உள்ள காணிகளைக்கூட துப்புரவாக்கத் தடைபோடும் வனவளத்திணைக்களம், படையினரின், அத்துமீறிய செயற்பாட்டாளர்களின் காடழிப்புகளுக்கு ஏன் மௌனம் காக்கின்றது.

ஒருபுறம் காடுகளைப் பாதுகாக்கவேண்டும் என செயற்றிட்டங்களை இந்த அரசு முன்னெடுக்கின்றது. ஆனால் மறுபுறம் சட்டவிரோத காடழிப்புகளையும் கட்டுப்படுத்த தவறுவதோடு அவற்றுக்கான திணைக்கள பொறுப்புக்கூறலையும் உரியவாறு முன்னிறுத்தவில்லை.

நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவில் அழிக்கப்படும் காடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மக்கள் எங்களுக்கு முறைப்பட்டு நாங்கள் அங்கு சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்தி வனவளத்திணைக்களத்திடம் சொல்லும் வரையில் காடழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திரிவச்சகுளம் பகுதியில் நடைபெற்ற காடழிப்பு, வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகில் நடைபெற்ற காடழிப்புகளில் மக்கள் நேரடியாக வனவளத்திணைக்கள அதிகாரிகளையுமே சாடுகின்றனர்.

எனவே, இவ்வாறு தமது எல்லைப்பரப்புகளில் சட்டவிரோத மரம் வெட்டுதல், நிருமாணங்களை மேற்கொள்ளல், காடழிப்புகள் நடைபெறுவதை கண்காணிக்கத்தவறுதல் என்பவை மீள நிகழாதிருக்கும் வகையில் வனவளத்திணைக்கள பொறுப்புக்கூறலை மேலும் வலுப்படுத்த தங்கள் அமைச்சு நடவடிக்கை எடுக்குமா? என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி இதன்போது பதிலளிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ள சட்டவிரோத காடழிப்புக்கள் தொடர்பாக எம்மால் ஆராய்ந்து பார்க்கப்படும்.

வனப்பாதுகாப்புப் பகுதியில் காணப்படுகின்ற காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கோ, வன அழிப்பிற்கோ நாம் அனுமதி வழங்குவதில்லை.

இருப்பினும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால், வனப்பயிரிடப்படுகின்ற காணிகளிலுள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. அவ்வாறு வெட்டப்படுகின்ற மரங்கள் மரக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படுகின்றன.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இங்கு குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக நான் ஆராய்ந்துபார்க்கின்றேன். தேவைமான நடவடிக்கைகளேயும் நான் மேற்கொள்கின்றேன் – என்றார்.

இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பாக தாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டுமென தொடர்ந்தும் அமைச்சரிடம் வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வனவளத் திணைக்களத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளும், சில உத்தியோகத்தர்களும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் எனவும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு.!

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்விற்கு அமைவாக சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்…

79 0 0
இலங்கை செய்திகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றார்களா?

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றார்களா என இன்று (14.11.2026) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் கேள்வி நேரத்தின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர்…

83 0 0
இலங்கை செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு; நாடாளுமன்றத்தில் கடும் அமளி.!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை நேற்று நள்ளிரவு முதல் திடீரெனப் பெருமளவில் அதிகரித்தமை தொடர்பில், இன்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும்…

34 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு.!

2027 ஆண்டில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு விசுவமடு மாவீரர் பெற்றோர் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்குபடுத்தலில் விசுவமடு சந்தியில் நடைபெற்றது. விசுவமடு புளியடி சந்தையில்…

86 0 0