உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
3 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சமையல் எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்திருந்த வர்த்தகருக்கு அபராதம்.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
80 பார்வைகள்

சமையல் எரிவாயு கையிருப்பில் இருந்தபோதிலும், எரிவாயு இல்லை எனக் கூறி நுகர்வோருக்கு விற்பனை செய்ய மறுத்து அவற்றை மறைத்து வைத்திருந்த கண்டிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட 12.5 கிலோகிராம் நிறையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் முழுமையாக அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டி, கொட்டுகொடெல்ல வீதியில் இலக்கம் 124 இல் அமைந்துள்ள ‘D.D. Gurusinghe Trading’ என்ற பெயரிலான லிட்ரோ எரிவாயு விற்பனை முகவர் நிலையத்திலேயே இந்தச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுகர்வோரிடமிருந்து கிடைத்த தொடர் முறைப்பாடுகளைத் தொடர்ந்து, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் (CAA) கண்டி மாவட்ட விசாரணை அதிகாரிகள் கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி குறித்த விற்பனை நிலையத்தில் விசேட சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையின் போது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் ரகசியக் கொள்வனவாளராகச் சென்று 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றை விலைக்குக் கேட்டுள்ளார்.

அப்போது கடையில் எரிவாயு சிலிண்டர்கள் எதுவும் இல்லை என வர்த்தகர் விற்பனை செய்ய மறுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் குறித்த வர்த்தக நிலையத்தை அதிரடியாகச் சோதனையிட்டபோது, அங்கு 12.5 கிலோகிராம் நிறையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அத்தனை சிலிண்டர்களையும் வழக்குச் சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றிய அதிகாரிகள், கண்டி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

நீதிமன்ற விசாரணைகளின் முடிவில், அத்தியாவசியப் பொருட்களை மறைத்து வைத்து நுகர்வோரை ஏமாற்றிய குற்றத்திற்காக வர்த்தகருக்கு அபராதம் விதித்த நீதவான், கைப்பற்றப்பட்ட 28 எரிவாயு சிலிண்டர்களையும் வர்த்தகரிடம் மீண்டும் ஒப்படைக்காமல் முழுமையாக அரசுடைமையாக்குமாறு உத்தரவிட்டார்.

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 16(அ) பிரிவின்படி, விற்பனைக்காகப் பொருட்களைப் பொறுப்பில் வைத்துக்கொண்டு, அவை தம்மிடம் இல்லை என நுகர்வோரிடம் கூறுவது சட்டவிரோத செயலாகும்.

பொருட்களை மறைத்து வைத்தல் மற்றும் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகளும் விசாரணைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் இதுபோன்ற சட்டமீறல்கள் மற்றும் அநீதியான வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஏபியூ மாநாட்டுக்காக தனியார் ஊடக நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாவுக்கும் மேல் ஒதுக்கீடு – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

ஆசிய – பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் 63ஆவது பொது மாநாடு மற்றும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு தனியார் ஊடக நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாவுக்கு அதிகமான…

69 0 0
இலங்கை செய்திகள்

மலையக மற்றும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எங்கே? : மனோ கணேசன் எம்.பி கேள்வி!

மலையகத் தமிழர்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில், எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீட்டு உரையில் தெளிவான பதில்களை வழங்குமாறு தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு இறக்குமதி அரிசி வகைகளுக்கான விசேட பண்டவரி நீக்கம்!

இரண்டு வகை இறக்குமதி அரிசிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கிலோகிராமுக்கு 65 ரூபாய் விசேட பண்டங்கள் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி…

74 0 0
இலங்கை செய்திகள்

ரம்புக்கனை நோக்கிச் சென்ற தொடருந்தின் மீது மரம் வீழ்ந்து விபத்து!

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கிச் சென்ற ரயில் மீது, பொல்கஹவெல தொடருந்து நிலையத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாகப் பிரதான பாதையின்…

75 0 0