உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘கிங் கான்’ ஷாருக்கின் பிறந்தநாள்

சினிமா 3 வாரங்கள் முன்
128 பார்வைகள்

பொலிவூட் திரையுலகின் ‘கிங் கான்’ ஷாருக்கான் இன்று (2) தனது 61-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவருக்கு உலகளவில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல புதிய அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஷாருக்கான் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள மிகப்பெரிய அதிரடித் திரைப்படமான ‘கிங்’ (King) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். இத்திரைப்படம் 2026 டிசம்பர் 24 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘கிங்’ திரைப்படத்தின் மூலம் ஷாருக்கான் முதன்முறையாக தனது மகள் சுஹானா கானுடன் இணைந்து நடிக்கிறார்.

இவர்களுடன் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் மற்றும் ராணி முகர்ஜி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வழக்கம் போல், மும்பையிலுள்ள அவரது இல்லமான ‘மன்னத்’ (Mannat) முன்பாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நள்ளிரவு முதலே குவிந்து பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு ஷாருக்கான் தனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மும்பை பாந்த்ரா-வொர்லி சீ லிங்க் ஒளிர்கிறது:

ஷாருக்கானின் பிறந்தநாளைக் சிறப்பிக்கும் வகையில் மும்பையின் புகழ்பெற்ற பாந்த்ரா-வொர்லி கடற்பாலம் (Bandra-Worli Sea Link) அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரத்யேக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

147 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

130 0 0
சினிமா

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார். கடந்த…

132 0 0
சினிமா

திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். கன்னட சினிமாவில்…

101 0 0