உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஓம் திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்த தனுஸ் : நன்றி தெரிவித்த சூர்யா!

சினிமா 3 வாரங்கள் முன்
115 பார்வைகள்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ (Scene) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, தனது திரைப்படத்திற்காக, அவருடைய நடிப்பில் உருவாகிய ஓம் திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்த நடிகர் தனுஷுக்கு மேடையிலேயே பகிரங்கமாக நன்றி தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இதே காலகட்டத்தில் தனுஷின் ‘ஓம்’ படமும் வெளியாகவிருந்தது.

பொக்ஸ் ஆபிஸில் மோதலைத் தவிர்க்கும் பொருட்டு, ‘சீன்’ திரைப்படம் தீபாவளிக்கு வருவதால் தனது ‘ஓம்’ படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைப்பதாகத் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், விழா மேடையில் பேசிய சூர்யா, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனுஷின் இந்த பரந்த மனப்பான்மைக்கும் ஒத்துழைப்புக்கும் தனது சிறப்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தனுஷ் மற்றும் சூர்யா ஆகிய முன்னணி நடிகர்களின் இந்த பரஸ்பர புரிதல் தமிழ் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

147 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

130 0 0
சினிமா

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார். கடந்த…

132 0 0
சினிமா

திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். கன்னட சினிமாவில்…

101 0 0