உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொலிஸ் இராஜ்ஜியத்தை நோக்கி நாடு நகர்கின்றதா?

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
68 பார்வைகள்

அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் புதிய சட்டமூலங்கள் காரணமாக நாடு ஜனநாயகப் பாதையிலிருந்து விலகி, ஒரு கட்சி ஆட்சியைக் கொண்ட பொலிஸ் இராஜ்ஜியத்தை நோக்கி நகர்கின்றதா என்ற பாரிய அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையான விசனம் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இஷார ஹர்ஷண என்ற இளைஞன் பொலிஸ் காவலில் இருந்தபோதே உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசமைப்பின் 13 (4) உறுப்புரையின்படி பொலிஸ் காவலில் உள்ள ஒருவரின் உயிர், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரின் சட்டரீதியான கடமையாகும்.

ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழந்த இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான, சுதந்திரமான மற்றும் வெளிப்படைத்தன்மையான விசாரணைகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.

அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலங்கள் குறித்து எச்சரித்த அவர்,

“அரசால் கொண்டுவரப்படவுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஆகியன மக்களின் பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியாகக் கூடும் உரிமை போன்ற அடிப்படை மனித உரிமைகளைக் கடுமையாகப் பாதிக்கும்.

இத்தகைய அடக்குமுறைச் சட்டமூலங்கள் ஊடாக சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தவே அரசு முயற்சிக்கின்றது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக இருக்க வேண்டுமே தவிர, ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாக அமையக் கூடாது.

அரசின் இத்தகைய ஜனநாயக விரோத முயற்சிகளைத் தோற்கடிப்பதற்குத் தேவையான உயர்மட்டத் தலைமைத்துவத்தை மக்கள் சக்தியுடன் இணைந்து வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா.!

எத்தனை சவால்கள் மற்றும் பொருளாதாரக் கஷ்டங்கள் நிலவினாலும், நமது கலாச்சாரத்தையும் கலைகளையும் பேணிப் பாதுகாத்து வரும் கலைஞர்களும் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களும் கௌரவிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண…

47 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் வெளியான புதிய பட்டியல்; கொடுப்பனவை இழந்த பல இலட்சம் மக்கள்.!

இலங்கையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. பயனாளிகளைத் தெரிவு செய்யும் புதிய நடைமுறையால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய வர்த்தமானி…

74 0 0
இலங்கை செய்திகள்

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பியபோது கைதானவர் நீதிமன்றில் ஆஜர்.!

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபர், வழக்கு விசாரணைகளுக்காக இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு…

77 0 0
இலங்கை செய்திகள்

ரில்வின் சில்வாவை சந்தித்த இந்திய பௌத்த அறிஞர்கள், நடிகர் ககன் மாலிக் குழுவினர்.!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள ‘புத்தவனம்’ திட்டத்தின் விசேட அதிகாரி பேராசிரியர் மாலப்பள்ளி லக்ஷ்மையா தலைமையிலான உலக பௌத்த அறிஞர்கள் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பிரபல…

54 0 0