ரோஹித், கோலி தெரிவு குறித்து BCCIயின் தலைவர் மிதுன் மன்ஹாஸ் விளக்கம்!
2027 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணி தெரிவு குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) தலைவர் மிதுன் மன்ஹாஸ் முக்கிய விளக்கமளித்துள்ளார்.
“ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் செயல்திறன் (Performance) மற்றும் உடற்தகுதி (Fitness) ஆகியவற்றைப் பொறுத்தே அவர்கள் இருவரும் அணிக்குத் தெரிவு செய்யப்படுவார்கள் என மிதுன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்களின் தேர்வில் வயது ஒரு காரணியாகவோ அல்லது தடையாகவோ இருக்காது” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

