ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!
ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரமுதுகஹ சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஐஸ் போதைப்பொருளுடன் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஹபராதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வஞ்சாவல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபராவார்.
நேற்று புதன்கிழமை (21) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 12 கிராம் 620 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
08 ஆம் திகதி இடம்பெற்ற இரு பெண்களின் கொலைச் சம்பவத்துடன் இவருக்குத் தொடர்பிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த இரு கடைகளை உடைத்து சொத்துக்களைக் களவாடிய சம்பவங்கள் மற்றும் மிதிவண்டி ஒன்றை திருடிய சம்பவம் ஆகியவற்றுடனும் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

