உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
86 பார்வைகள்

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட வீதிப் பயன்பாட்டாளர்களிடையே வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நேற்று புதன்கிழமை(21) கல்முனை கல்வி வலயத்தில் நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வாக, கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக அமைந்துள்ள பிரதான வீதியில், வீதிப் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது.

தொடர்ந்து, நிகழ்வின் பிரதான நிகழ்ச்சிகள் கல்முனை கார்மேல் பாத்திமா பாடசாலையில் நடைபெற்றன. இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கல்முனை போக்குவரத்து பிரிவு பொலிஸாரால் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விசேட விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.

இதன்போது, வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுதல், பாதசாரிக் கடவைகளைப் பயன்படுத்துதல், வீதியைக் கடக்கும்போது அவதானமாகச் செயற்படுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது பாதுகாப்புத் தலைக்கவசம் அணிவதன் அவசியம், வாகனம் செலுத்தும்போதும் வீதியில் நடக்கும்போதும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் மற்றும் அவசர சந்தர்ப்பங்களில் 1990 சுவசெரிய நோயாளர் காவு வண்டிச் சேவையைத் தொடர்பு கொள்வது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக, பயிற்சி பெற்ற விசேட பொலிஸ் உத்தியோகத்தர்களால் நிகழ்த்தப்பட்ட மாதிரி வீதி விபத்துக்களின் செய்முறை விளக்கங்கள் மாணவர்களின் கவனத்தை ஈர்த்தன.

விபத்துக்களின்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு நடைமுறை ரீதியான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இச்செயல் விளக்கங்கள் அமைந்திருந்தன.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், கல்முனைத் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. எம். எஸ். சஹுதுல் நஜீம், பங்கேற்றதுடன் மாணவர்களின் பங்களிப்பைப் பாராட்டி அவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களைக் குறைத்து, பெறுமதியான உயிர்களைப் பாதுகாப்பதே இவ்விழிப்புணர்வு நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்தது.

சுயாதீன தொலைக்காட்சி சேவை (ITN), வசந்தம் தொலைக்காட்சி, வசந்தம் எஃப்.எம். மற்றும் லக்ஹண்ட வானொலி ஆகிய ஊடக நிறுவனங்கள், கல்வி அமைச்சு மற்றும் இலங்கைப் பொலிஸார் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இதற்கு Fairfirst Insurance காப்புறுதி நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் மூலம் விபத்துக்களைத் தவிர்த்து பாதுகாப்பான பயணங்களை உறுதிப்படுத்த முடியும் என்ற செய்தியை இந்நிகழ்வு வலியுறுத்தியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போராட்டத்தில் ஈடுபடும் பிக்குகளுக்கு அருகில் கூரிய ஆயுதத்துடன் வந்த நபரால் பரபரப்பு.!

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில், கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு கூரிய ஆயுதத்துடன் நபர் ஒருவர் இன்று…

71 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை பீடி இலைகள் கைப்பற்றல்; சந்தேகநபர்கள் கைது.!

புத்தளம் உடப்பு பிரதேசத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகையை பரிமாறிக்கொள்ள முயன்ற இரு இந்திய டவ் படகுகள் மற்றும் இரு உள்ளூர்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம், இணுவில் காங்கேசன்துறை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (22) அதிகாலை, இணுவில் பகுதியில் கோவில் வாசலுக்கு அருகில் சைக்கிளில் பயணித்த…

65 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரமுதுகஹ சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஐஸ் போதைப்பொருளுடன் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஹபராதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

54 0 0