உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தியாக தீபம் திலீபனின் சிலை நிறுவப்பட்ட விவகாரம்; அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
80 பார்வைகள்

யாழ். நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“சிலை நிறுவுவதற்கான நிதியுதவி, நிர்மாணப் பணிகள், அதனைப் பிரபலப்படுத்துதல் மற்றும் சிலை திறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தல் ஆகிய நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 14 பேரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்தமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திலீபனின் சிலையைப் பொலிஸார் பொறுப்பேற்று, வழக்குப் பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” – என்றார்.

கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி யாழ். நல்லூரில் திலீபன் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியில் நிறுவப்பட்டிருந்த சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இதற்கு முன்னர் இந்த விவகாரம் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில், சிலையை அகற்றுவதற்கு முன்னர் பொலிஸார் உரிய நீதிமன்றத்தில் விடயங்களைச் சமர்ப்பித்திருந்தனர் என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகளை ஊக்குவிப்பதை இலங்கைச் சட்டம் கடுமையாகத் தடை செய்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரமுதுகஹ சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஐஸ் போதைப்பொருளுடன் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஹபராதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

49 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மேயரிடம் சி.ஐ.டியினர் தீவிர விசாரணை.!

“தியாக தீபம் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரிந்துகொண்டா நல்லூரில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கினீர்கள்?” என யாழ்ப்பாணம் மாநகர மேயர் திருமதி…

71 0 0
இலங்கை செய்திகள்

வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.!

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட வீதிப் பயன்பாட்டாளர்களிடையே வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka)…

82 0 0
இலங்கை செய்திகள்

உயிருக்குப் போராடும் யானை; பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு.!

சம்மாந்துறை சேகப்பற்று வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது…

63 0 0