உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
19 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சியில் மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகள் விநியோகம்

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
81 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகளும், 20 மீனவர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது

மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதையும், இயற்கை பேரழிவுகளினால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டித்வா’ பேரிடர் நிலையினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிவாரணத் திட்டத்தின் கீழ், தட்டவன்கோட்டிப் பகுதி மீனவர்கள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மீனவர்களுக்கு இவ்வாறு படகுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கிடையில், மீனவர் அடையாள அட்டைகளை வழங்கும் நடைமுறையை மேலும் பரவலாக்கி, திறம்படச் செய்யும் நோக்கில் புதிய திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து மட்டுமே அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வந்த மீனவர் அடையாள அட்டைகள், இனிவரும் காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அச்சிடப்பட்டு வழங்கப்படுவதற்கான வசதி இதன் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப் புதிய நடைமுறையின் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்களுக்குப் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

இதன் காரணமாக, அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொழும்புக்கு வருவதற்குச் செலவாகும் நேரமும் பணமும் மிச்சப்படுத்தப்பட்டு, மாவட்ட மட்டத்திலேயே உரிய சேவையை இலகுவாகப் பெற்றுக்கொள்ள மீனவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், மீன்பிடித் தொழிலை மேலும் ஊக்குவித்தல் மற்றும் அரச சேவைகளை மக்களுக்கு மிகவும் இலகுவாகவும் திறம்படவும் வழங்குதல் என்பன இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காட்டின் ராஜாவை, இறுதியாக அந்த மகா வனமே தனது இதயத்தோடு தழுவிக் கொண்டது!

இலங்கையின் வரலாறு, சமயம், கலை மற்றும் மக்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய கம்பீர குறியீடாகத் திகழ்ந்த “காவன்திஸ்ஸ” (Dwirada Gaja Kavantissa) எனும் யானையின் மறைவையொட்டி, முன்னாள்…

71 0 0
இலங்கை செய்திகள்

மகா சங்கத்தினரிடம் மன்னிப்புக் கோரினார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர், தமது பதவிக் காலத்தில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில்…

66 0 0
இலங்கை செய்திகள்

நாமலின் பிரத்தியேக செயலாளர் கைது

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்க இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின்…

67 0 0
இலங்கை செய்திகள்

விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்த இலங்கைப் பணிப்பெண்!

குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் இலங்கை பணிப் பெண் ஒருவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய…

68 0 0