பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!
பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய வானூர்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 24 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த ஆண்டு மே 7ஆம் திகதி அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்ட நிலையில், மே 9 ஆம் திகதி அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பஹல்காம் தாக்குதலை முன்னிட்டு பாகிஸ்தான் வானூர்திகள் இந்தியாவின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
அதேபோல், பாகிஸ்தானும் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய வானூர்திகளுக்குத் தடை விதித்தது.
இந்தத் தடையானது அதன்பிறகும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்திய வானூர்தி நிறுவனங்களுக்கான வான்வெளித் தடையை நவம்பர் 24 ஆம் திகதி வரை நீட்டிப்பதாகப் பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

