படுகொ@லை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 26-ஆம் ஆண்டு நினைவேந்தல்!
படுகொலை செய்யப்படட ஊடகவியலாளர் மயில்வகனம் நிமலராஜனின் 26-ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஈகைச் சுடரேற்றி, அன்னாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.







