உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
19 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நடிகர் சல்மான் கானின் இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!

இந்திய செய்திகள் 10 மணி நேரம் முன்
86 பார்வைகள்

ஜுஹு பகுதியில் நேற்று (18) மாலை நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் சல்மான் கானின் இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சல்மான் கானின் ‘கேலக்ஸி அப்பார்ட்மென்ட்ஸ்’ (Galaxy Apartments) கட்டிடத்திற்கு வெளியே, குண்டு துளைக்காத கவச உடைகளை அணிந்த காவல்துறை பணியாளர்களையும், காவல் வாகனங்களையும் காண முடிந்தது.

காவல்துறையின் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7 மணியளவில், ஜுஹுவில் உள்ள ஒரு கால்பந்து கழகத்திலிருந்து நடிகர் டைகர் ஷெராஃப் காரில் வெளியேறியபோது, ​​அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் நடிகர் காயமின்றி தப்பினார், ஆனால் அவரது சாரதி காயமடைந்தார்.

சந்தேக நபர்களைக் கண்டறிய, மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு தங்களது தேடுதல் நடவடிக்கையை குஜராத் வரை விரிவுபடுத்தியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நடிகரின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்ததாகவும், அவர் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கால்பந்து மைதானத்திற்குச் செல்வது அவர்களுக்குத் தெரிந்திருந்தது என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தியவர்கள், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பாக அந்தப் பகுதியை ஆய்வு செய்து, அந்த நடிகரின் அன்றாடச் செயல்பாடுகளைத் தெரிந்துகொண்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு சந்தேக நபர்கள், எஸ்.வி. சாலை வழியாக, வில்லே பார்லே மற்றும் அந்தேரியைக் கடந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் போரிவலி நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறுவதற்கு முன்பு, அந்தேரி மேற்கு ரயில் நிலையம் அருகே தங்கள் மோட்டார் சைக்கிளைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையிடமிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் பின்னர் குஜராத்திற்குள் நுழைந்திருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

மும்பை குற்றப்பிரிவின் மூன்று முதல் நான்கு குழுக்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்காக, சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனைகளை நடத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, டைகர் ஷெராஃபின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார்.

வெடிமருந்து மற்றும் கண்ணாடித் துகள்களால் நடிகரின் இடது கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

டைகர் ஷெராஃபை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

இந்த அமைப்பு ஏற்கனவே நடிகர் சல்மான் கானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் சல்மான் கானின் இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளை பிடிக்க 15 குழுக்கள் அமைப்பு

பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மும்பையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் ஜூஹூவில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர்…

74 0 0
இந்திய செய்திகள்

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய வானூர்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 24 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத…

62 0 0
இந்திய செய்திகள்

மழை வேண்டி பக்தர்களுடன் மண் சோறு சாப்பிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, நிலத்தடி…

102 0 0
இந்திய செய்திகள்

மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என எச்சரித்தேன்! : திருமாவளவன் ஆதங்கம்!!

தேர்தலில், மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்று சேகர்பாபுவிடம் அப்போதே சொன்னேன் என தொல். திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான…

109 0 0