பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்.!
தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா உடல்நலக்குறைவால் தனது 75 ஆவது வயதில் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள சூர்யா மருத்துவமனையில் தேவா சிகிச்சை பெற்று வந்ததாகவும், இன்று சனிக்கிழமை (17) காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் காலை 8.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையின் மயிலாப்பூரில் பிறந்த தேவா, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தனது தனித்துவமான இசை பாணியால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், அண்ணாமலை, பாட்ஷா உட்பட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியுள்ளார்.
2022ஆம் ஆண்டு ‘தேவா தேவாதான்’ இசை நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் இதை சிலாகித்துப் பேசியிருப்பார்.
கானா பாடல்களை திரையுலகில் மைய நீரோட்டப்படுத்தியதில் தேவா முக்கியமானவராக அறியப்படுகிறார்.
தன்னை கானா பாடல்களோடு முத்திரை குத்துவது பற்றி தேவா பல இடங்களில் பேசியிருந்தாலும் அது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மறைவுச் செய்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இசைத் துறையினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


