64 ஆவது வயதில் 3ஆவது திருமணம் செய்துக் கொண்ட ஹொலிவூட் நடிகர் ஜிம் கேரி!
பிரபல ஹொலிவூட் நகைச்சுவை நடிகரான ஜிம் கேரி தனது நீண்ட நாள் காதலியான மின் ஆ என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
64 வயதாகும் நடிகர் ஜிம் கேரிக்கு இது 3ஆவது திருமணமாகும்.
கடந்த பெப்ரவரி மாதம் பரிஸில் நடைபெற்ற ‘சீசர் விருது’ (César Awards) விழாவில் மின் ஆ-வுடன் முதன்முறையாக ஜோடியாக கலந்துகொண்ட ஜிம் கேரி, அவரைத் தனது “சிறப்பான துணை” எனப் பொதுவெளியில் அறிமுகப்படுத்தியிருந்தார்.
திரையுலகில் பல தசாப்தங்களாகத் தனது அசாத்திய நகைச்சுவை நடிப்பால் உலகெங்கிலும் ரசிகர்களைக் கவர்ந்த ஜிம் கேரியின் இந்தத் திருமணச் செய்திக்கு, திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.