உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு இடையே மோதல்?

சினிமா 3 நாட்கள் முன்
69 பார்வைகள்

இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு வெங்கட் பிரபு விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே, அவரது பதிவுக்கு சிவகார்த்திகேயனும் பதிலளித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்த திரைப்படம் ஒன்று சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், சில காரணங்களால் குறித்த திரைப்படத்தின் பணிகள் தொடங்காமல் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் தாமதமாவது குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் தெரிவித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகின.

குறித்த கருத்துகள் சிவகார்த்திகேயனை குறிப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்திருந்த நிலையில், வெங்கட் பிரபு இதற்கு பதிலளித்து, தங்களுக்கிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், சில காரணங்களால் திரைப்படம் தொடங்காமல் போனதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

இதனிடையே, வெங்கட் பிரபுவின் பதிவுக்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன், இருவருக்கும் இடையே எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை என்பதைத் தனது பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பதிவில், வெங்கட் பிரபுவை “சார், நாம் ஒரு குடும்பம்” எனக் குறிப்பிட்டதுடன், அவரது வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் எப்போதும் வெங்கட் பிரபுவின் ரசிகனாக இருப்பேன். விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து உருவாக்கத் திட்டமிட்டிருந்த திரைப்படம் தற்போதைக்கு கைவிடப்பட்டுள்ளதா என்ற கேள்வி மீண்டும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. எனினும், திரைப்படம் தொடர்பான அடுத்தகட்ட முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

52 0 0
சினிமா

“உங்களின் உழைப்பிற்கு இந்த வெற்றி நிச்சயமாகத் தகுதியானது” : ஜேசன் சஞ்சைக்கு ஜோதிகா வாழ்த்து

திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கலைஞரின் ‘சிக்மா’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் சுவாரசியமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னணி நடிகை ஜோதிகா அந்த படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த…

83 0 0
சினிமா

64 ஆவது வயதில் 3ஆவது திருமணம் செய்துக் கொண்ட ஹொலிவூட் நடிகர் ஜிம் கேரி!

பிரபல ஹொலிவூட் நகைச்சுவை நடிகரான ஜிம் கேரி தனது நீண்ட நாள் காதலியான மின் ஆ என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

97 0 0
சினிமா

தென் கொரியாவின் பிரபல K-pop இசைக்கலைஞர் MINO-வுக்கு ஓராண்டு சிறை!

தென் கொரியாவின் பிரபல WINNER K-pop இசைக்குழுவின் உறுப்பினரான MINO-வுக்கு, நாட்டின் கட்டாய இராணுவ சேவைச் சட்டத்தை மீறிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சியோல் நீதிமன்றம்…

90 0 0