“என்றென்றும் ஒரே ராணிதான்!” – ஐஸ்வர்யா பச்சனுக்கு ரசிகர்கள் சூட்டிய மகுடம்
உலகப் புகழ்பெற்ற பாரிஸ் ஆடை அலங்கார வாரத்தில் பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது கம்பீரமான ‘ரோயல்’ தோற்றத்தால் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஈபிள் கோபுரத்தின் பின்னணியில் நடைபெற்ற இந்த ஆடை அலங்கார அணிவகுப்பில் அடர் நிற வெல்வெட் உடையணிந்து நடைபயின்ற அவர், பாடகி செலினே டியானுடன் கை கோர்த்து நடனமாடி மேடையை அதிரவைத்தார்.
கெண்டல் ஜென்னர், சிமோன் ஆஷ்லி உள்ளிட்ட பல சர்வதேச நட்சத்திரங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், ஐஸ்வர்யா ராயின் இந்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
“என்றென்றும் ஒரே ராணிதான்!” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யை கொண்டாடி வருகின்றனர்.