உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்குடன் தொடர்புடைய 12 இடங்களில் அதிரடி சோதனை

சினிமா 4 நாட்கள் முன்
120 பார்வைகள்

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங்குடன் தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட மும்பையில் உள்ள 12 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரகுல் ப்ரீத் சிங் தமிழில் ‘அயலான்’, ‘இந்தியன் 2’, ‘என்.ஜி.கே’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ரகுல் ப்ரீத் சிங், அவரது மாமனார் வாசு பக்னானி மற்றும் அவர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பேனோரமா கலையகம் உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரைப்பட முதலீடுகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் நிதி தொடர்பான விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த காலங்களில் தெலுங்கு திரையுலகில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான விசாரணையின்போதும் ரகுல் ப்ரீத் சிங்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கடந்த ஆண்டு ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் தொடர்பாக மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தற்போதைய வருமான வரித்துறை சோதனைக்கும் போதைப்பொருள் தொடர்பான விவகாரங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

52 0 0
சினிமா

“உங்களின் உழைப்பிற்கு இந்த வெற்றி நிச்சயமாகத் தகுதியானது” : ஜேசன் சஞ்சைக்கு ஜோதிகா வாழ்த்து

திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கலைஞரின் ‘சிக்மா’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் சுவாரசியமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னணி நடிகை ஜோதிகா அந்த படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த…

82 0 0
சினிமா

64 ஆவது வயதில் 3ஆவது திருமணம் செய்துக் கொண்ட ஹொலிவூட் நடிகர் ஜிம் கேரி!

பிரபல ஹொலிவூட் நகைச்சுவை நடிகரான ஜிம் கேரி தனது நீண்ட நாள் காதலியான மின் ஆ என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

96 0 0
சினிமா

தென் கொரியாவின் பிரபல K-pop இசைக்கலைஞர் MINO-வுக்கு ஓராண்டு சிறை!

தென் கொரியாவின் பிரபல WINNER K-pop இசைக்குழுவின் உறுப்பினரான MINO-வுக்கு, நாட்டின் கட்டாய இராணுவ சேவைச் சட்டத்தை மீறிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சியோல் நீதிமன்றம்…

90 0 0