உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
29 செவ்வாய்

ரவி மோகன் – கெனிஷா : கோவிலில் இணைந்து தரிசனம்!

சினிமா 9 மணி நேரம் முன்
97 பார்வைகள்

நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான விவகாரம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இருவரும் பிரிந்துவிட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இருவரும் இணைந்து திருப்போரூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்துள்ளதாகக் கூறப்படும் நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் கடந்த 2024ஆம் ஆண்டு விவாகரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரவி மோகனுக்கும் கெனிஷாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆர்த்தி தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும், கெனிஷா தனது மனநல ஆலோசகராகவும் நெருங்கிய நண்பராகவும் மட்டுமே இருப்பதாக ரவி மோகன் முன்னர் விளக்கம் அளித்திருந்தார்.

இருவரும் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் காணப்பட்டதுடன், ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்திலும் கெனிஷா இணைந்து செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையில், இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், கெனிஷா தன்னை விட்டு விலகிவிட்டதாக ரவி மோகன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர், கோவாவில் இருவரும் ஒன்றாக இருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனம் பெற்றிருந்தன.

இந்நிலையில், தற்போது இருவரும் திருப்போரூர் முருகன் கோயிலில் ஒன்றாக தரிசனம் செய்துள்ளதாக வெளியாகியுள்ள நிழற்படங்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.

இந்த நிழற்படங்களை அடிப்படையாகக் கொண்டு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

டிராகன் 2 போஸ்டர் போலியானது.. தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வந்த டிராகன் படம் கடந்த வருடம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருப்பதாகவும்,…

116 0 0
சினிமா

மதுரை வானூர்தி நிலையத்தில் நடிகர் தனுஷுக்கு உற்சாக வரவேற்பு!

புதிய திரைப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நடிகர் தனுஷ் மதுரைக்கு சென்றுள்ளார். மதுரை வானூர்தி நிலையத்திற்கு சென்றடைந்த அவருக்கு திரண்டு வந்திருந்த ரசிகர்கள் மாலை அணிவித்தும், வேல்…

120 0 0
சினிமா

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

‘மகாராஜா 2’ திரைப்படத்தின் பணிகள் நடைபெற்று வருவதை விஜய் சேதுபதி உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குநர் நிதிலன் சாமிநாதன் ஏற்கனவே தன்னிடம் விவரித்துவிட்டதாக அவர்…

95 0 0
சினிமா

இசையமைப்பாளர் இளையராஜாவுக்குக் கௌரவம் : அஞ்சல் தலையை வெளியிட்டது அவுஸ்ரேலிய அரசு

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. இந்திய இசைக் கலைஞர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் என்பதால் உலக அளவில் இசை நிகழ்ச்சிகளையும் இளையராஜா மேற்கொண்டு…

105 0 0