உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
25 வெள்ளி

ஏ.ஆர். ரஹ்மான், மைக்கேல் ஜாக்சன் கூட்டணி : தமன் வெளியிட்ட தகவல்!

சினிமா 17 மணி நேரம் முன்
101 பார்வைகள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான், உலகப் புகழ்பெற்ற பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டிருந்ததாக இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

‘Honest Townhall’ நிகழ்ச்சியில் பேசிய தமன், ‘எந்திரன்’ திரைப்படத்துக்காக மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து ஒரு பாடலை உருவாக்கும் திட்டம் இருந்ததாகவும், அதற்கான ஒப்பந்தப் பணிகள் 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் நிறைவடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த இசைக் கூட்டணி நிறைவேறாமல் போனதாக தமன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 2009ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் லொஸ் ஏஞ்சல்ஸில் மைக்கேல் ஜாக்சனை சந்தித்ததாக ஏ.ஆர். ரஹ்மான் கூறியிருந்தார்.

அப்போது, இருவரும் இசை மற்றும் உலக அமைதி குறித்து கலந்துரையாடியதாகவும் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.

மேலும், ‘We Are The World’ பாடலைப் போன்ற மற்றொரு பாடலை இணைந்து உருவாக்குவது குறித்து மைக்கேல் ஜாக்சன் தன்னிடம் பேசியதாகவும், பின்னர் இந்த சந்திப்பு குறித்து இயக்குநர் ஷங்கரிடம் தெரிவித்ததாகவும் ரஹ்மான் முன்னதாக கூறியிருந்தார்.

மைக்கேல் ஜாக்சனின் மறைவால் இந்த முயற்சி நிறைவேறாமல் போன நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தகவலை இசையமைப்பாளர் தமன் தற்போது பகிர்ந்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

‘மகாராஜா 2’ திரைப்படத்தின் பணிகள் நடைபெற்று வருவதை விஜய் சேதுபதி உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குநர் நிதிலன் சாமிநாதன் ஏற்கனவே தன்னிடம் விவரித்துவிட்டதாக அவர்…

76 0 0
சினிமா

இசையமைப்பாளர் இளையராஜாவுக்குக் கௌரவம் : அஞ்சல் தலையை வெளியிட்டது அவுஸ்ரேலிய அரசு

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. இந்திய இசைக் கலைஞர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் என்பதால் உலக அளவில் இசை நிகழ்ச்சிகளையும் இளையராஜா மேற்கொண்டு…

81 0 0
சினிமா

இந்தியாவின் 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா குஜராத்தில் நடைபெற்றது

இந்திய திரைப்படத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று (22) குஜராத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இதுவரை…

77 0 0
சினிமா

“மண்டாடி” திரைப்படத்தின் வசூல் 100 கோடி!

அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “மண்டாடி”. இந்த திரைப்படம் இராமநாதபுரம் கடற்றொழிலாளர்களின் வாழ்வியலையும், அவர்களின் பாரம்பரிய…

40 0 0