உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கின்னஸ் சாதனை படைத்த ராக்கா திரைப்படம்

சினிமா 14 மணி நேரம் முன்
28 பார்வைகள்

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா திரைப்படம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ராக்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராக்கா படத்திற்காக உலகின் முதன்மையான விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில், ராக்கா திரைப்படம் ஒரு கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.

திரைப்படத் தயாரிப்பில் ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நிகழ்நேர மோஷன் – கேப்சர் தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்தது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கென 37 நடிகர்களின் அசைவுகள் நிகழ்நேர மோஷன் – கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்டது.

மோஷன் – கேப்சர் என்பது நடிகர்களின் உடல் அசைவுகள் மற்றும் முகப் பாவனைகளைச் சிறப்பு சென்சார்கள் மற்றும் கெமராக்கள் மூலம் கணினியில் டிஜிட்டல் கதாபாத்திரங்களாக மாற்றும் அதிநவீன தொழில்நுட்பம்.

வழக்கமாக மோஷன் – கேப்சர் தொழில்நுட்பத்தில் ஒரு சில நடிகர்களை மட்டுமே ஒரே நேரத்தில் படம்பிடித்துள்ள நிலையில், ராக்கா திரைப்படத்தில் 37 பேர் ஒரே நேரத்தில் படம்பிடிக்கப்பட்டது உலகத் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சாதனைக்கான அதிகாரப்பூர்வ கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழை நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ இணைந்து பெற்றுக்கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

காசோலை மோசடி : சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா முறைப்பாடு!

சுமார் 46 கோடி ரூபாய் (இந்திய மதிப்பு) அளவிலான காசோலை மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது நடிகை…

32 0 0
சினிமா

திருமணத்திற்குப் பின்பும் சினிமா பயணம் : மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!

திருமணத்திற்குப் பிறகும் தனது வாழ்க்கையில் எந்தவொரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்றும், சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்துகொண்டதால், தனது கலைப் பயணம் எப்போதும் போல…

29 0 0
சினிமா

“தர்மன்” படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!

ரஜினியின் ‘தர்மன்’ படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173 ஆவது திரைப்படமான…

36 0 0
சினிமா

கர்நாடக இசை அரசியாக மாறும் ராஷ்மிகா மந்தனா!

இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை…

45 0 0