உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மகனுக்குக் கொள்ளையடிக்க இடமளித்துவிட்டு கைது செய்ததும் கண்ணீர் சிந்தி அனுதாபம் தேடுவதில் எந்தப் பயனும் கிடையாது!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
120 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. தவறிழைத்தவர்களும், ஊழல்களில் ஈடுபட்டவர்களுமே சட்ட நடவடிக்கைக்கு அஞ்சி, போலிக் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரிவரச் செய்யும் என்றும், இந்த விடயத்தில் எவருக்கும் மன்னிப்பு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொலன்னறுவையில் நேற்று மாலை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாதாள உலகக் குழுக்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது. முற்றாகத் துடைத்தெறியப்படும். மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை. போதைப்பொருள் வியாபாரமும் ஒழிக்கப்படும்.

எவரையும் அரசியல் ரீதியில் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இல்லை. விசாரணைகள் சிறப்பாக இடம்பெற வேண்டும். அந்த விசாரணைகளின் பிரகாரம் – சட்டத்துக்கமையவே தண்டனை வழங்கப்படுகின்றது. இது பழிவாங்கலா?

எமக்கு எவருடனும் தனிப்பட்ட குரோதம் கிடையாது. ஆனால் இந்த நாட்டை அழித்த ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

மகன் கொள்ளையடிக்கும்போது, மகனே அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தந்தை கூறி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், கைது செய்த பின்னர் அழுது அனுதாபம் தேடுவதில் பயன் இல்லை.

மகனுக்குக் கொள்ளையடிக்க இடமளித்துவிட்டு, கைது செய்ததும் கண்ணீர் சிந்துகின்றனர். அனுதாபம் மூலம் இதனைத் தடுத்துவிட முடியாது.” – என்றார் ஜனாதிபதி.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செத்தல் மிளகாயின் விலை அதிகரிக்கும் அபாயம்.!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் காலங்களில் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் செத்தல்…

106 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கிய ஐவர்; ஒருவர் உ**யிரிழப்பு.!

பெந்தோட்டை கடலில் மூழ்கி ஐந்து இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நால்வரும் நேற்று (22) பிற்பகல் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால்…

116 0 0
இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி இருவர் உ**யிரிழப்பு.!

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் இந்த…

118 0 0
இலங்கை செய்திகள்

யாழில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது.!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில், டி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 துப்பாக்கி ரவைகளுடன் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த…

137 0 0