உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

இலங்கை செய்திகள் 48 நிமிடங்கள் முன்
76 பார்வைகள்

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இன்று சனிக்கிழமை அநுர அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது அரசுக்கு உள்ளது. மக்களின் உண்மையான ஆணை அரசின் பக்கமே முழுமையாகச் சாய்ந்துள்ளது.

மொட்டுக் கட்சியினர் அல்லது எதிர்க்கட்சிகள் மக்களை வலுக்கட்டாயமாகத் திரட்டி முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவ்விதப் பலனையும் தராது.

மக்களின் கவனத்தை திசைதிருப்பும் இத்தகைய வெற்று முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடியும்.

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது.

மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது.

இத்தகைய போராட்டங்கள் யாவும் நாட்டு நலனுக்காக அல்லாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் சுயநல அஜண்டாக்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.

மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அரசாட்சியைக் குலைக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் தந்திரோபாயங்களை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தீர்த்து, நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் அரசின் முறையான வேலைத்திட்டங்களுக்குப் பொதுமக்கள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவர்.” – என்றார்.
……………………….

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

85 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

94 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

83 0 0
இலங்கை செய்திகள்

உயர்கல்வித் துறை பற்றிய உபக்குழு கூடியது

பல்கலைக்கழகப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையை மிகவும் திறம்பட முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் ஆலோசனை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி…

118 0 0