உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

சீன நாட்டவர் படுகொ@லை – 03 சந்தேக நபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரல்!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
71 பார்வைகள்

கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொ@லை செய்த சம்பவம் தொடர்பாக, தேடப்பட்டு வரும் மூன்று சீன நாட்டைச் சேர்ந்த சந்தேகநபர்களைக் கைது செய்வதற்குப் பொலிசார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

கடந்த 2026.07.23 அன்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மேலதிகமாக மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த மூன்று சீன நாட்டவர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதுடன், சுற்றுலா விசாவில் வருகை தந்த இவர்களின் செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி சந்தேகத்துக்கிடமான மூன்று சீன நாட்டவர்களும் வான் அல்லது கடல் வழி ஊடாகச் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டுத் தப்பியோடக் கூடும் என்பதால், அவர்களைக் கைது செய்யப் பொதுமக்களின் ஆதரவைப் பொலிசார் கோரியுள்ளதுடன், சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருப்பின், பொறுப்பதிகாரி / கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு – 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிசார், பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

36 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0