உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவர்களுக்குத் தண்டப்பணம்

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
75 பார்வைகள்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருடாந்த மகோற்சவம் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், ஆலயத்தின் சுற்றுப்புறச்சூழலை வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாகப் பேணிவருவதுடன், ஆலய சுற்றுப்புறமானது புகையிலை அற்ற மண்டலமாகச் சுகாதாரத் தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றுப்புறத்தில் காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக, கடந்த 2026.08.20 வியாழக்கிழமை அன்று வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகரான ப. தினேஸினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பந்தப்பட்டவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், தலா 10,000 ரூபா வீதம் மொத்தம் 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்.!

நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க…

81 0 0
இலங்கை செய்திகள்

முகநூல் களியாட்ட நிகழ்வு; 41 பேர் கைது.!

தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட முகநூல் களியாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைத்து 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ்…

80 0 0
இலங்கை செய்திகள்

தந்தையை கொ*லை செய்த மகன்.!

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார். இருவருக்கும்…

82 0 0
இலங்கை செய்திகள்

செவ்வாயன்று கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார்…

56 0 0