உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர விசாரணை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
142 பார்வைகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் சுகாதாரப் பணியாளர்களின் சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் விசாரணை இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பணியாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம், “குறித்த ஆடை அனுமதிக்கப்படாத ஒன்றாக இருந்தால், அதே ஆடையுடன் அவர்கள் வேறு அரச வைத்தியசாலையில் எவ்வாறு பணியாற்ற முடியும்? அவ்வாறாயின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முடியாத தனி மண்டலமாகவா கல்முனை ஆதார வைத்தியசாலை தொழிற்படுகிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், அரச தாபன விதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகளை மட்டும் மேற்கோள் காட்டி அதிகாரிகள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது என்றும், தாதியர் உள்ளிட்ட ஏனைய பணியாளர்களுக்கும் இப் பிரச்சினை விரிவடையும் முன் சுகாதார அமைச்சு தேசிய மட்டத்திலான நிரந்தரக் கொள்கைத் தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், இச் சம்பவத்தைச் சாதகமாகப் பயன்படுத்திச் சமூக வலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்களையும் போலிப் பிரசாரங்களையும் பரப்புவதைத் தவிர்த்துப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு கஞ்சா மீட்பு.!

இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 77 கிலோகிராம் கஞ்சாவுடன் பைபர் படகொன்று இந்தியக் கடலோரக் காவல்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், பாம்பன் குந்துகால் கடற்கரைப்…

99 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…

110 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உ**யிரிழந்த சம்பவம்; அமைச்சர் சந்திரசேகர் உடனடி தலையீடு.!

கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக…

114 0 0
இலங்கை செய்திகள்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.!

மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அந்தவகையில், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 500 ரூபாய்க்கும், பச்சை…

105 0 0