உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

அநுர அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள் அமைச்சர்களே காரணம்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
84 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள் அமைச்சர்களே காரணம் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நண்பர் ஜனாதிபதி அநுரவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

பாதாள உலகக் செயல்களும் போதைப்பொருளும் ஒழியும் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும்.

இந்த ஆட்சிக்கு வெளி நபர்களால் எந்த ஆபத்துமில்லை. உள்ளகத்திலேயே ஆபத்து இருக்கின்றது.

நாங்கள் இன்று எதிர்க்கட்சி இல்லை, தாமே அரசு, அதிகாரம் தம்மிடம்தான் உள்ளது என்பதை உணராத, ஆளத் தெரியாத முட்டாள் அமைச்சர்கள் காரணமாகச் சிங்கள மக்கள் மத்தியில் அரசின் செல்வாக்கு சரிந்து வருகின்றது.

இரண்டு வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எம்மைக் குறை கூறுவதைத் தவிர வேறு எதையும் செய்யத் தெரியாத, செய்யாத மந்திரிகள் காரணமாக அரச செல்வாக்கு குறைந்து வருகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

130 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

112 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

110 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0