உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

175 நாட்களைத் தாண்டிய தடுப்புக்காவல்; சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி ஐ.நா. அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
112 பார்வைகள்

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, ஜனாதிபதியின் தன்னிச்சையான தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 175 நாட்களுக்கு மேலாக சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டி, அவருக்கு நீதி கோரி பொதுமக்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

சலேவுக்கு ஆதரவளிக்கும் ஒரு குழுவினரால் இந்த மகஜர் நேற்று வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி, அவருக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துகளுடன் கூடிய இந்த ஆவணம், அவரது தடுப்புக்காவல் தொடர்பான கவலைகளைச் சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்லும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மகஜர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

38 0 0