உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லை உயர்வு; அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்கான முயற்சி.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
105 பார்வைகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவானது, நீதித்துறை மீதான அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்கும், தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபையில் நேற்று குற்றம் சாட்டினார்.

22ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்து நீதிமன்ற நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கைக்கு மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
“16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான அபராதங்களை அதிகரிப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எனினும், இது தொடர்பாக இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கே வேலைவாய்ப்புக் கிடைக்காத சூழ்நிலை நிலவுகின்றது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் தங்கள் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அரச வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.” – என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு உடனடியாகத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0