உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

சத்துருக்கொண்டான் படு கொ*லை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் சி.ஐ.டியினர் வாக்குமூலம் பதிவு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
114 பார்வைகள்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரினால் சுமார் 03 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த புதைகுழி தொடர்பில் முகாம் அமைந்துள்ள பகுதியில் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறும் கடந்த ஆண்டு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர் வைரமுத்து குழந்தை வடிவேல் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.

இதனடிப்படையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு கடந்த 14ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக தன்னால் பாதுகாப்பு காரணங்களினால் அங்கு வரமுடியாது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பில் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் துறையினரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு உறுப்பினர் தயாளகௌரி, சிவில் சமூக செயற்பாட்டாளர் கண்டுமணி லவகுகராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன், மாநகரசபையின் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார் ஆகியோரும் சென்றிருந்தனர்.

வாக்குமூலம் வழங்கிய பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் இது தொடர்பான ஊடக சந்திப்பும் நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

27 0 0