உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

சாப்பிட மட்டும்தான் வாய் திறப்பார்களா? – தமிழ் பேசும் அரச எம்.பிக்களை கடுமையாகச் சாடிய மனோ எம்.பி.

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
119 பார்வைகள்

எல்லா இன மக்களின் ஆதரவையும் பெற்ற ஜனாதிபதியும், 159 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பெரும்பான்மையும் அரசிடம் உள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

ஆனால், இந்த அரசிடம் சாப்பிட மட்டும்தான் வாய் திறக்கும், அரச தமிழ் பேசும் எம்.பிக்கள் உள்ளனர் என்றும் என்றும் அவர் கடுமையாகச் சாட்டினார்.

அமைச்சரவை, பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் தமிழ் பேசும் அமைச்சர்கள், எம்.பிக்கள் அனைவரும் இணைந்ததுதான் அரசு என்றும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்திப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறுவது ஏன் என்றும் அவர் ஊடகங்களிடம் கேள்வி எழுப்பினார்.

சுகாதார அமைச்சர் நினைத்தால் ஒரே நாளில் முடிக்க வேண்டிய கல்முனை வைத்தியசாலை சீருடைப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், சுமார் 10 நாள்களாகக் காலம் தாழ்த்திவிட்டுப் பின்னர் தற்காலிக தீர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சி முஸ்லிம் எம்பிக்கள் அமைச்சரைச் சந்தித்த போதிலும், ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசின் தமிழ், முஸ்லிம் எம்பிக்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வெளியில் ஈழத்து, மலையக, முஸ்லிம் மக்களிடம் வெறும் வாய்ச் சவடால் அடிக்கும் தமிழ் பேசும் அரச அமைச்சர்களும் எம்.பிக்களும், உள்ளே செல்லும்போது எதற்காகவும் வாய் திறப்பதில்லை என்பதும், அதிகார மையத்துக்கு அருகில் அவர்கள் எவருமில்லை என்பதும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்பதும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “நாம் இலங்கையர்” என்ற வெற்றுச் சமத்துவக் கோஷத்தை விமர்சித்துள்ள அவர், எல்லோருக்கும் அதிகாரம் இருந்தால் மட்டுமே உண்மையான சமத்துவம் சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார்.

தான் அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சரவையில் குரல் கொடுத்தமையையும், மேசையில் அடித்துப் போராடியதையும் அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

33 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

25 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

24 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் படு கொ*லைக்கு சர்வதேச விசாரணையே தீர்வு.!

“தமிழினப் படு கொலைக்கு கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள் செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது…

43 0 0