உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

கிழக்கு பல்கலைக்கழக மாணவி விடுதியில் உயிரிழப்பு : அதிர்ச்சியில் இரு தோழிகள் மருத்துவமனையில் அனுமதி

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
111 பார்வைகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் கல்லடி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் இருவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் ஆர்.டி.ஏ வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய கே. யாழினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த கல்லூரியில் நாடகத்துறை கற்கைநெறிக்காகத் தெரிவு செய்யப்பட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்வி கற்பதற்காக விடுதியில் தங்கியிருந்த வேளையே இந்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் 12 மணியளவில் விடுதி அறையில் மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரு மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக சக மாணவர்கள் மூன்று பேரையும் மீட்டு மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

எனினும், மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மயங்கி விழுந்த மாணவிகள் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 31 வரையிலான 7 மாத காலப்பகுதியில் 84 பேர் உயிரிழந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2025 ஆம் ஆண்டு முழு ஆண்டில் மட்டும் மாவட்டத்தில் 164 பேர் இவ்வாறான அசம்பாவிதங்களால் உயிரிழந்துள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமை அலுவலகப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

39 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0