உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகை; மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
124 பார்வைகள்

கட்டுநாயக்க, ஹிரண மற்றும் ஹோமாகம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருந்தொகையான கோடா மற்றும் கசிப்புடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுவத்த பகுதியில் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 3,780 லீற்றர் (21 பேரல்கள்) கோடா கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டிபன பகுதியில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 2,340 லீற்றர் (13 பேரல்கள்) கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஹிரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருக்கொட பகுதியில் ஹிரண பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட முற்றுகையின் போது, 67 லீற்றரும் 500 மில்லி லீற்றரும் கொண்ட 90 போத்தல் சட்டவிரோதக் கசிப்பு மற்றும் 1,110 லீற்றர் (8 பேரல்கள்) கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய அருக்கொட பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

117 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

98 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

106 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

118 0 0