உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

இரவு நேர பேருந்து சேவை இன்றி பயணிகள் அவதி.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
102 பார்வைகள்

கொழும்பில் இருந்து ஹட்டன் மற்றும் மஸ்கெலியா நோக்கி செல்லும் பேருந்துகள் இரவு நேரங்களில் போதியளவில் இயங்காததால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு பிரதான பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், பேருந்து சேவை இல்லாத காரணத்தால் அங்கேயே உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன், மஸ்கெலியா உள்ளிட்ட மலைநாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் பல மணி நேரமாக பேருந்துக்காக காத்திருப்பதாகவும், இதனால் பெண்கள், வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிப்போர் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சரும் கவனம் செலுத்தி, கொழும்பில் இருந்து ஹட்டன் மற்றும் மஸ்கெலியா நோக்கிய பேருந்து சேவைகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நிலையில் நாவலப்பிட்டி கொழும்புக்கு மேலதிக தனியார் அரச பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.

மஸ்கெலியா நகரில் இருந்தும் சாமிமலை நகரில் இருந்தும் தலைநகர் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், பதுளை, கதிர்காமம் போன்ற பகுதிகளுக்கு தனியார் பேருந்து சேவைகள் அதிகரிக்க வேண்டும் அவ்வாறு தனியார் பேருந்து சேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் பயணிகள் நன்மை அடைவர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் போக்குவரத்து அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

40 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0