உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
86 பார்வைகள்

319/L இஞ்ஜஸ்ட்ரி கிராம சேவகர் பிரிவின் கீழ் இயங்கி வரும் விசேட தேவையுடையோர் அமைப்பின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வு நேற்று 18 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.

நோர்வூட் பிரதேச செயலகத்தின் சமூக நல உத்தியோகத்தர் திருமதி நிர்மலா அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, அமைப்பின் தலைவர் எஸ். குமாரவேல் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதன் அவசியம், சுற்றுப்புறச் சூழலை சுத்தமாகப் பேணுவதன் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பங்கேற்ற அனைவரின் ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவடைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

128 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

106 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

107 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0