உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
145 பார்வைகள்

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்கவெல்லவை இரண்டு வழக்குகளிலும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சந்தகல’ எனும் தொல்பொருளைத் திருடிய தனது மகனை விசாரணைகளிலிருந்து காப்பாற்றத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது முதன்மை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் உண்மைகளைச் சமர்ப்பித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சி நடந்ததாகச் சுட்டிக்காட்டினர்.

எனினும், சந்தேகநபரை விளக்கமறியலில் வைப்பதற்குப் போதுமான சான்றுகள் இல்லை எனக் எனக் கூறி, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் கடவுச்சீட்டை ஒப்படைக்கும் நிபந்தனையிலும் நீதவான் பிணை வழங்கினார்.

அத்துடன், ஊடக அமைச்சராக இருந்தபோது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் 6 பேரை சட்டவிரோதமாகத் தனது தனிப்பட்ட ஊழியர்களாக நியமித்த இரண்டாவது வழக்கிலும், அவரைத் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

121 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

100 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

107 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0