உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை நிலையத்திற்குப் பூட்டு!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
128 பார்வைகள்

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீவிர சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை பலசரக்குக் கடை ஒன்று, களுவாஞ்சிகுடி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று (18.08.2026 – செவ்வாய்க்கிழமை) அதிரடியாகப் பூட்டப்பட்டுள்ளது.

மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட களப் பரிசோதனையின் போது, குறித்த பலசரக்குக் கடையில் கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் நிலவுவது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பொது சுகாதாரப் பரிசோதகரால் இன்று களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரணை செய்த கௌரவ நீதிமன்றம், கடை உரிமையாளரை 03 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன், இனங்காணப்பட்ட அனைத்து சுகாதாரக் குறைபாடுகளும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் வரை கடையை உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் பூட்டி வைக்குமாறு உத்தரவிட்டது.

பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் இத்தகைய தொடர் நடவடிக்கைகள், அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0