உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசியல் பிரவேசத்துக்குத் தயாராகும் நடிகர் தனுஷ்?

சினிமா 2 மாதங்கள் முன்
118 பார்வைகள்

நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் அவரது நற்பணி மன்றம் சார்பில் கோவை மாவட்டத்தில் புதிய கிளைகளைத் தொடங்கவும், உறுப்பினர்களைச் சேர்க்கவும் அறிவுறுத்தி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சமீபத்தில் நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்களில் “தலைவர் தனுஷ்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகர் தனுஷ், நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், நிழற்படம் எடுத்தோம் என்று மட்டும் இருக்கக் கூடாது.

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்திற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிதாக நற்பணி மன்றங்களைத் தொடங்கவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் மன்ற நிர்வாகியைத் தொடர்பு கொள்ளுமாறு அகில இந்திய தனுஷ் நற்பணி மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதால், தனுஷ் விரைவில் அரசியல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், அடுத்ததாக ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் இயக்கத்திலும், இயக்குநர் வெற்றிமாறனின் ‘தமிழ் முருகன்’ திரைப்படத்திலும் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

66 0 0