உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மதத்தின் பெயரால் பிரிவினைகளை ஏற்படுத்த  முயற்சிப்போருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
182 பார்வைகள்

மலையகம் எந்த விதமான இனவாதமும் இல்லாமல் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின்  வளாகத்தில் புத்தர் சிலையொன்றை இரவோடு இரவாக வைப்பதற்கு சில இனவாதக் கும்பல்கள் முயற்சியை மேற்கொண்டுள்ளன.

இதை வன்மையாகக் கண்டிப்பதோடு அரசாங்கம் இத்தகையோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 இன முரண்பாடுகள் நாட்டில் அமைதியின்மையையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதை கடந்த காலங்களில் எமது நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

அதேநேரம், மலையகத்தில் இன மோதல்களுக்கு இடம் கொடுக்காமல் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த நேரத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நுவரெலியா வலப்பனை மல்லியப்பு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் கடந்த வாரம் சில இனவாதிகள் இரவு நேரத்தில் புத்தரின் சிலை ஒன்றை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளமை வான்மையாகக் கண்டிக்கத் தக்க விடயமாகும்.

 கடந்த காலங்களில் மலையகக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தில் இருந்த நேரங்களில் இத்தகைய அசம்பாவிதங்கள் எங்கும் நிகழவில்லை. ஆனால், இன்று தோட்டத் தொழிலாளர்கள் நிர்வாகங்களினால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

அத்தோடு, தோட்டத்தில் உள்ள இந்து ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கவும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய நிலைமை மேலும் தொடருமானால் மலையகம் கொந்தளிக்கும் நிலை உருவாகும் என்பதை சொல்லத் தேவையில்லை.

 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மீது நம்பிக்கை வைத்துதான் மலையக மக்கள் தேர்தலில் அதிகமான வாக்குகளைக் கொடுத்து ஆதரவு தெரிவித்து ஆட்சி பீடம் ஏற்றி வைத்துள்ளர்கள்.

அந்த மகக்ளுக்கு துன்பங்கள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும், பாதுகாக்க வேண்டிய கடமையும் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

எனவே, புத்தர் சிலையை வைத்து இன முரண்பாட்டை ஏற்படுத்த காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து இத்தகையை சம்பவங்கள் ஏனைய இடங்களுக்கும் பரவாமல் இருக்க அரசாங்கம் உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மலையகத்தில் இனவாதம் தலைதூக்கும் போது முளையிலேயே கிள்ளியெறிந்து தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் நிலவுகின்ற ஒற்றுமையை கட்டிக் காக்க முன்வர வேண்டும்.

மலையக மக்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்து வருகின்ற நேரத்தில் இனமுறுகல் ஏற்படுமாயின் அது நாட்டின் பொருளாதரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்தப் பிரச்னையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும் என்றும் குறிபிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிங்கராஜ வனப்பகுதியில் உயிரியல் வளக் கொள்ளை – 4 சீனப் பிரஜைகளுக்கு 7.64 கோடி ரூபாய் அபராதம்!

சிங்கராஜ வனப்பகுதியின் இடையக வலயத்தில் உயிரியல் வளக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு சீனப் பிரஜைகளுக்கு மொத்தம் 7 கோடியே 64 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

79 0 0
இலங்கை செய்திகள்

தாய்லாந்துக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்கவிற்கு அழைப்பு

எதிர்வரும் காலத்தில் தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, தாய்லாந்து துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் ஃபுவாங்கேட்கியோ (Sihasak Phuangketkeow), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு…

103 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – மஹிந்த ஜயசிங்க!

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இடைக்காலக் கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறு கோரி இன்று (23) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர்…

110 0 0
இலங்கை செய்திகள்

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமனம்!

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) இடம்பெற்ற…

106 0 0